FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, October 26, 2018

இழந்த செவித் திறனை மீட்டக முடியுமா?

25.10.2018
காது கேட்காமல் போவதை குணப்படுத்தும் ஆய்வில், முக்கிய முன்னேற்றத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாள்பட காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. உட் காதுப் பகுதியில் நத்தையின் சுருண்ட கொம்புகளைப் போல உள்ள பகுதியில் வளரும் முடி வடிவில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது அதில் ஒன்று. ஒரு மனிதருக்கு சராசரியாக, 15 ஆயிரம் செல்கள் இருக்கும்.

மிகையான இரைச்சல், அத்துமீறிய ஓசை போன்றவற்றால் இந்த நுண்ணிய செல்கள் நாளடைவில் பாதிக்கப்படுகின்றன. இதனால், காதின் ஒலி உணர் திறன் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் காது கேளாமல் போய்விடும் ஆபத்தும் உண்டு.

மனிதனின் உடலில் உள்ள பிற செல்களைப் போல முடி செல்கள் ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் வளர்வதில்லை. எனவே, அவற்றின் வளர்ச்சியை மீண்டும் துாண்ட முடியுமா என, விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

அண்மையில் பிரிட்டனில் உள்ள ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் உள்ள முடி செல்கள், மீண்டும் வளர்வதற்கு சமிக்ஞை தரும் புரதங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஆனால், அவை ஏனோ, முடி செல்கள் வளர்வதற்கு சமிக்ஞை தராமலேயே இருக்கின்றன. அந்த செல்களுக்கு துாண்டுதல் தந்த போது, அவை மீண்டும் வளர ஆரம்பித்தன.

எலிகளின் மீதான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இழந்த செவி கேட்கும் திறனை மீட்க முடியும் என நிரூபித்துள்ளனர். இதே போன்ற ஆய்வை செவித் திறனை இழந்தோர் மீது விரைவில் அவர்கள் துவங்கி வெற்றி கண்டால், காது கேளாமையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

No comments:

Post a Comment