FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, June 1, 2017

மார்க் குறைவால் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவிக்கு சீட் மறுப்பு… டெய்லரிங் படிக்கச் சொன்ன அடாவடி பள்ளி!

26.05.2017
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற்றுத்திறனாளி மாணவியை தையல் வேலைக்கு அனுப்புமாறும் தனியார் பள்ளி பிளஸ் 1 சீட் தர மறுத்துள்ளது. சென்னை எண்ணூர் கத்திவாக்கம் வள்ளுவர் நகரைச்சேர்ந்த ரம்யா செவித்திறன் குறைபாடுள்ள மாணவி. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எண்ணூரில் உள்ள புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ரம்யாவின் தந்தை இளமுருகன் மற்றும் தாய் கீதா கூலித் தொழிலாளர்கள். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 309 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள ரம்யா பதினோறாம் வகுப்பில் சேர அதே பள்ளியை அணுகியுள்ளார்.

பள்ளி மறுப்பு 

ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சேர்க்கை விண்ணப்பம் தர உதவி தலைமை ஆசிரியை மறுத்துவிட்டார். மேலும், தற்போதைய பாடத்திட்டம் ரம்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அடாவடி பதில்

மேலும் ரம்யாவிற்கு படிப்பு வராது, அவளை தையல் கிளாஸ் அல்லது வேறு ஏதேனும் கைத்தொழிலில் சேர்த்த விடுங்கள் என்று கூறியுள்ளார் உதவி ஆசிரியை. இதனால் மனம் நொந்த மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீருடன் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளார்.

விடாத நற்பெயர் மோகம் 

மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கக் கூடாது என்று ரேங்க் முறையை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருந்து அரசு ரத்து செய்தது. ஆனால் கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் அவர்களுக்கு கல்வியறிவை புகட்டாமல் மறுபடியும் மதிப்பெண்ணையே மையப்படுத்துவது ஏன் என்பது தான் புரியவில்லை.

மாற வேண்டும் 

என்ன செய்தாலும் பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடும் என்ற போக்கை தனியார் பள்ளிகள் எப்போது தான் கைவிடுமோ தெரியவில்லை. சிறு விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை புரிந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு சீட் தர முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment