திருச்சி: மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து திருச்சியில் மாற்றுத் திறனாளிகள் கண்டண ஆர்பாட்டம் ஆர்பாட்டம் நடத்தினர். |
ஜுலை 1ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 18 சதவீதமும், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி பொருட்களுக்கு 12 சதவீதமும், காதுகேளாதோருக்கான கருவிகளுக்கு 12 சதவீதம் என மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிவிதிப்பை 18 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளை தெய்விப்பிறவி என்று கூறிய பிரதமர் மோடி மாற்றுத் திறனாளிகளுக்கு வரிவிதித்து, இது போன்ற தீங்கினை இழைப்பதைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment