அவர் சைகையில் தெரிவித்த தகவல்கள் போலீசாருக்கு புரியாததால் காவல்துறையினரால் புகார் எடுக்க முடியவில்லை. இதையடுத்து காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமாக புகார் பெறப்பட்டது.
அந்த புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவின்போது இரண்டு பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காவல்ஆய்வாளர் வாசுகி , மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பெண் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment