31.05.2017
திருச்சி: டிஆர்ஓ தர்ப்பகராஜிடம் தேசிய பார் வையற்றோர் சம்மேளன நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினி யில் பதிவு செய்து கொள்ள ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி இலவசமாக பதிவு செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து மிக குறைந்த தொகையான ரூ.20க்கு மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பதிவு செய்ய இ சேவை மையத்திற்கு உத்தரவிட வேண்டும். குறைதீர்நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள் தொடர்பான 174 மனுக்கள், குடும்ப அட்டை தொடர் பான 21மனு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, மாற்று திறனா ளிகள், விதவை உதவித் தொகை கோரி 37மனு, வேலைவாய்ப்பு தொடர்பான 19 மனு, தெருவிளக்கு, பஸ் வசதி, இதர அடிப்படை வசதிகள் கோரி 44 மனு, புகார் தொடர்பான 14 மனு, கல்வி உதவித் தொகை, வங்கி கடன், இதர கடன் 11 மனு, திருமண உதவித் தொகை, சலவை பெட்டி தொடர்பான 12, பென்சன், நிலுவைத் தொகை தொடர்பான 7 மற்றும் 101 இதர மனுக்கள் சேர்த்து 440 மனுக்கள் பெறப் பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment