21.06.2017
கருமத்தம்பட்டி : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் ஊராட்சி அனந்தாபுரத்தில், திருப்பூர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறு முதல் பிளஸ்2 வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் மீது, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி தாளாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதிகாரிகள் நடத்திய விசாரணையை அடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க முடிவானது. ஜூன் 20ம் தேதி பள்ளிக்கு 'சீல்' வைக்கப்படும், என்ற மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரின் உத்தரவு பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த, 16ம் தேதி வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், நேற்று பள்ளிக்கு சென்று, 'சீல்' வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
No comments:
Post a Comment