FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, June 29, 2017

மாற்றுத் திறனாளிகளின் 'சைகை' ஆர்ப்பாட்டம்

29.06.2017, பழநி, பழநியில் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் வழங்ககோரிக்கை 'சைகை' முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, வாய்பேச, காதுகேளாதோர் சங்க கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாதன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர்.
2, 4 சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்பேச இயலாத, காதுகேளாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னரும் வழங்காமல் உள்ளனர். உடனடியாக ஓட்டுனர் உரிமம் வழங்கவேண்டும் என, வலியுறுத்தி 'சைகை' முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment