FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

16.06.2017
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5 முதல் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, நாடு முழுவதும் மத்திய அரசின் வரிகள், மாநில அரசு விதிக்கும் வரிகள் எனப் பலவிதமான வரிவிதிப்பு முறைகள் அமலில் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் ஒரே விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.

இதனால், ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜிஎஸ்டி-க்கு தமிழகம் தயாராகிவிட்டது. இதன் காரணமாக பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவை மட்டும் அல்லாமல் எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மருந்துப் பொருள்களின் விலை கணிசமாக உயர்கிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள்மீது மத்திய அரசு ஜிஎஸ்டி அறிக்கையில் கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ப்ரெய்லி தட்டச்சு இயந்திரம், ப்ரெய்லி காகிதம், ப்ரெய்லி கடிகாரம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, காதுகேள் இயந்திரம், ஊன்றுகோல் ஆகியவைமீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது, பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்துசெய்யக் கோரி, மாற்றுத் திறனாளிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதேபோல சென்னை பாரிமுனையிலும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், தலைமைத் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

No comments:

Post a Comment