FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, June 17, 2017

மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி: உ.பி. அரசு அதிரடி

15.06.2017
மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய உத்தரப்பிரதேசம் மாநில அரசு தீர்மானித்துள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடன் தொகையில் 1.60 கோடி ரூபாய் வரை அவர்கள் திருப்பி செலுத்தியுள்ளனர். நிலுவை தொகையான 3.88 கோடி ரூபாயை இன்னும் 100 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய அரசு தீர்மானித்துள்ளது என அம்மாநில மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி ஓம்பிரகாஷ் ராஜ்பர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகையை 300 ரூபயில் இருந்து 500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வங்கிக் கடன் தொகையை 30 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். இவர்களுக்கான திருமண உதவித் தொகையும் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக அளிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த வாகனங்களுடன் காய்கறி, பழங்களை கொண்டு சென்று விற்கும் இணைப்பு மேடையும் இருக்கும். பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு கோடி மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் சிறு, குறு தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் இணைக்கப்படுவார்கள். மேலும், மத்திய திறன் மேம்பாட்டு இலக்கு திட்டத்திலும் இவர்கள் இடம் பெறுவார்கள்.

இதுவரை மாநிலத்துக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி சீட்டு அளிக்கப்பட்டு வந்தது. இனி வெளி மாநிலங்களுக்கு செல்லும் உத்தரப்பிரதேசம் மாநில பேருந்துகளிலும் அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment