FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 23, 2017

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி

23.06.2017
அன்புள்ள ஜெயமோகன்.,

நேற்றைக்கு திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை மூடி சீல் வைக்க அரசு முயன்றிருக்கிறது. பள்ளியிலிருந்து வெளியேற முடியாது என்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

பாலியல் புகாரின் நோக்கமே அந்தத் தாளாளர் வாய் திறக்க முடியாதபடிக்கு கூனி நிற்கச் செய்ய வேண்டித்தான்; உலகமும் அதை நம்பத் தயாராகத் தான் இருக்கும். இந்நிலையில் புகாரை மறுத்துக் குழந்தைகளே போராடியிருப்பதில் கொஞ்சம் நிம்மதி.

ஊர் ஊமையானதால்; அந்தக் குழந்தைகள் பேசிவிட்டன. இப்போது ஊர் செவிடுமாகிவிட்டது. இனி அறங்கூற்றாகுமெனக் காத்திருக்க வேண்டியதுதான் அல்லவா!?

ராஜன் ராதாமணாளன்.


அன்புள்ள ராஜன்

உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கறாராகப்பார்த்தால் இதுவரை என்ன நடந்துள்ளது? பற்பல ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளியில் படித்த ஒரு பெண் ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். எந்த ஆதாரமும் அதற்கு இல்லை. நீதிமன்றத்தில் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. ஒரு வழக்கு மட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆனால் அதைப்பயன்படுத்தி திரு முருகசாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். ஊடகங்களுக்கு ஒரு கூட்டம் நேரடியாகச் சென்று அந்த காட்சிகளை வழங்கி அவை தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும்படிச் செய்திருக்கிறார்கள்.

அதன்பின் அங்கே பணியாற்றுபவர்களிடமும் குழந்தைகளிடமும் குற்றச்சாட்டு கூறும்படி வலியுறுத்துகிறார்கள். அப்படி குற்றச்சாட்டுகள் எழாதபோது குழந்தைகளை அழைத்துச்செல்லும்படி பெற்றோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படியும் பெரும்பாலான குழந்தைகள் எஞ்சவே வலுக்கட்டாயமாக பள்ளியைப் பூட்ட முயல்கிறார்கள். வெறும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் முப்பதாண்டுக்கால வரலாறும் பலருடைய தியாயங்களும் கொண்டு வளர்ந்த ஒரு நிறுவனம் முற்றாக அழிக்கப்படுகிறது.

ஏன் என்றால் அந்த நிலம். அது ஒருகாலத்தில் பொட்டல். இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ளது. அவ்வாறு மதிப்புக்குரியதாக அது ஆனதே அப்பள்ளியால்தான். அப்பள்ளி முருகசாமியின் சொத்து அல்ல. ஏராளமான மக்களின் நன்கொடை அதில் உள்ளது. என் நன்கொடையும் ஒரு சிறு துளி உள்ளதனால் இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இன்று அதை ஒரு குடும்பச் சொத்தாக எடுத்துக்கொள்ளும் முயற்சி நிகழ்கிறது.

குறைந்தபட்சம் அப்பள்ளி திருப்பூரின் சொத்து என்றாவது மக்கள் நினைக்கவேண்டும். அதை அரசியல்வாதிகள் சூறையாட அவர்கள் அனுமதிக்கலாகாது. அதை சம்பந்தமில்லாதவர்கள் எவ்வகையில் எடுத்துக்கொண்டாலும் அதை அழிப்பார்கள். ஏனென்றால் அந்த நிலம் மட்டுமே அவர்களின் இலக்கு. அப்பள்ளி அதை உருவாக்கிய முருகசாமியால் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதன் அன்றாடச்செயல்பாடுகளில் எவரும் தலையிடக்கூடாது

உண்மையில் முருகசாமி அவர்கள்மேல் ஐயம் இருக்குமென்றால் அவருக்குமேல் அவரைக் கண்காணிக்கும்படி பொதுமக்கள் அடங்கிய ஒரு சிறுகுழுவை நியமிக்கலாம். அவர் சட்டவிரோதமாக ஏதேனும் செய்கிறாரா என கண்காணிக்கலாம். சட்டபூர்வமாகவே அப்படி அமைக்க நீதிமன்றம் ஆணையிடலாம்.

ஆனால் ஆரம்பம் முதலே மிகமிக ஒருதலைப்பட்சமாக, உள்நோக்குடன் அனைத்து அரசுசார் அமைப்புக்களும் செயல்படுகின்றனவா என ஐயம் இருக்கிறது. அந்நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே நிகழ்கின்றன.

சோர்வூட்டும் ஒரு நிலை. அதற்குப்பின்னாலிருப்பவை இரண்டு மனநிலைகள். பொதுச்சொத்து என்பது சொந்த மரம், வெட்டி வீழ்த்தி அள்ளித்தின்னவேண்டியதுதான் என்னும் உறவினர்களின் மனநிலை. எந்த அவதூறையும் உடனடியாக வம்புப்பேச்சாக மாற்றி ரசிக்கும், எந்தப்பொதுவிஷயத்திலும் ஈடுபடத் தயங்கும் மக்கள்

திருப்பூரில் ஒரு மக்கள்குழு அமைந்து இந்தவிஷயத்தில் தலையிடவேண்டும். அப்பள்ளியை அழிக்க அவர்கள் அனுமதித்தால் அது அவர்களை மொண்ணைகள் என்றுதான் உலகுக்குக் காட்டும்

ஜெ

No comments:

Post a Comment