07.06.2017
பேஸ்புக் ஒரு உலகளாவிய சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. அனைவரும் இந்த வலைப்பின்னல் மேடையை அணுகுவதன் மூலம் மட்டுமே அந்த நோக்கம் மாபெரும் வலைப்பின்னல் நிறுவனத்திற்கு சாத்தியமாகும்.பேஸ்புக் லைவ் பதிவில் க்ளோஸ்டு கேப்ஷன்களை இயக்குவதன் மூலம், மேடையில் அனைவருக்கும் அதை அணுகும் வண்ணம் அமைக்கலாம். இந்த பேஸ்புக் லைவ் க்ளோஸ்டு தலைப்புகள் பயன்படுத்தி, காதுகேளாத அல்லது கேட்கும் குறைபாடுளினால் பாதிக்கப்பட்ட பயனர்கள் நேரடி வீடியோக்களை அனுபவிக்க முடியும். தலைப்பிட அமைப்புகளை மாற்றுவதன் மூலம் இது சாத்தியமாகும். இந்த அமைப்பு இயக்கப்பட்டதும், பயனர்கள் பேஸ்புக் லைவ் ஒளிபரப்பில் தானாகவே ஆட்டோமெட்டிக்காகக்ளோஸ்டு தலைப்புகளை பார்க்கலாம்.
பிசியில் இந்த அம்சத்தை இயக்குவது எப்படி.?
பிசியில் இந்த கேப்ஷன்ஸ் அமைப்பை இயக்க நீங்கள் செட்டிங்ஸ் சென்று இடது பக்கத்தில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டியலில் இருந்து வீடியோஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இங்கு டீபால்ட் ஆக ஆப் செய்யப்பட்டிருக்கும் "ஆல்வேஸ் ஷோஸ் கேப்ஷன்ஸ்" என்ற விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். பின்னர் எப்போதெலலாம் வீடியோ தோன்றுகிறதோ கேப்ஷன்களை காட்டவும் என்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.
பேஸ்புக் நேரடி ஒளிபரப்பின் பிரபலதன்மை.!
கடந்த ஆண்டு முதல், பேஸ்புக் நேரடி ஒளிபரப்புகளின் தினசரி கண்காணிப்பு நேரம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பேஸ்புக்கில் உள்ள ஐந்து வீடியோக்களில் கிட்டத்தட்ட ஒன்று நேரடி வீடியோவாக உள்ளது. இந்த குறிப்பிட்ட க்ளோஸ்டு கேப்ஷன் அம்சமானது நேரடி ஒளிபரப்புகளை அதிக ஈடுபாட்டுடன் மக்களை சென்றடைய உதவும் என்று நம்பப்படுகிறது.
நேரடி அல்லாத வீடியோக்களும் தலைப்புகள் பெற முடியும்.!
இந்த அம்சத்தின் என்னவென்றால் நேரடி அல்லாத வீடியோக்களை வெளியிடும் போது கூட கேப்ஷன்களை பதிவிடலாம். தங்கள் பேஸ்புக் பக்கங்களில் வீடியோ பதிவேற்றம் நிகழ்த்தும் போது தலைப்புகள் சேர்க்க முடியும். வெளியீட்டாளர்கள் தங்கள் பக்கங்களில் வீடியோக்களில் தானாக தலைப்புகள் உருவாக்க பிளாட்பார்மின் ஸ்பீச் ரிக்கனைசேஷன் சேவையைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment