FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, June 22, 2017

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி இடமாற்றம்.... மாணவர்களின் போராட்ட விளைவு!

21.06.2017
திருப்பூர் மாவட்டம் கோதம்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது திருப்பூர் காது கேளாதோர் பள்ளி. இப்பள்ளியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயில்கிறார்கள். கடந்த மே மாதம் இப்பள்ளியின் தாளாளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இப்பள்ளிக்கு வந்த அரசு அதிகாரிகள், குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு பள்ளியை மூட முயன்றிருக்கிறார்கள். ஆனால், பள்ளியை விட்டு போக மறுத்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் பயிலும் சிறுமி சுகுணாவின் தந்தை சின்னசாமி கூறுகையில் "ஒண்ணாவதுல இருந்து என் புள்ள இந்த ஸ்கூல்லதான் படிக்குது. வாரம் ஒரு தடவை வந்து பாத்துட்டுப்போவேன். இதுவரை என் பொண்ணு எந்தக் குறையும் சொன்னது இல்ல. போன வெள்ளிக்கிழமைல இருந்து என் பொண்ணைக் கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க. இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தையா கூப்பிட்டு கேளுங்க, ஒரு குழந்தை இந்தப் பள்ளியை பத்தி தப்பா சொல்லிட்டாலும் நாங்க எங்க குழந்தைகளை கூப்பிட்டுப் போறோம். ஆனால், அவங்ககிட்ட கேட்க அரசு அதிகாரிகள் யாரும் தயாரா இல்லை. காலைல இருந்து யாரும் சாப்பிடல. அதைப்பத்தி எந்தக் கவலையும் அரசுக்கு இல்ல. அரசு அதிகாரிகளுக்கும் இல்லை. என் பொண்ணோட மொழி தெரியாம நான் வீட்டுக்குக் கூட்டிட்டு போய் என்ன பண்றதுனு தெரியல" என்கிறார் வேதனையோடு.

சிறுவன் அதியமான் என்பவரது பெற்றோரிடம் கேட்டதற்கு " என்னோட பையன் இப்போ பத்தாவது படிக்கிறான். அவனை ரெண்டு வயசுல இங்க கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். இன்னைக்கு அவன் நல்லா படிக்கிறான். இங்க படிக்கிற 100 குழந்தைகளும் அப்படித்தான் இங்க படிக்கிறாங்க. ரெண்டு நாளா பயங்கரமான மனப் போராட்டத்துல இருக்காங்க, தூக்கம் இல்ல, சாப்பாடு இல்ல. யாரும் இந்தப் பள்ளி கூடத்தை விட்டுப் போக மாட்டேன்னு உறுதியா இருக்காங்க. சின்ன வயசுல தமிழ்நாட்ல காதுகேளாதோர் பள்ளியில் இந்தப் பள்ளிக்கூடம் தான் முன்னிலைல இருக்கு. இந்த ஸ்கூல்ல காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் இருக்கு. என்னோட பையன் இங்க தான் படிப்பான். நாங்க வேற எங்கயும் கொண்டு போய் சேர்க்க முடியாது. அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். அதுவரை யாரும் பள்ளியை விட்டுப் போக மாட்டோம்’’ என்கிறார்.

பள்ளியைச் சேர்ந்தவர்கள் பள்ளியை மூடக் கூடாது என நீதி மன்றத்தில் தடை உத்தரவு கோரி நேற்று (20/06/2017) மனு அளித்திருக்கிறார்கள். அதன் மீதான விசாரணை நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளியை மூட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதியினரும் விரும்புகின்றனர்.

பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் யாரும் பள்ளியிலிருந்து செல்வதற்குத் தயாராக இல்லை. சாப்பிடவும் மறுக்கிறார்கள். இப்போது வரை மண் தரையில் அமர்ந்து, சைகை மொழியில் "நாங்கள் போக மாட்டோம்" என ஒரு சேர அவர்கள் போராடுவது அரசுக்காகவோ, அப்பள்ளிக்காகவோ அல்ல, அவர்களின் எதிர்காலத்திற்காக. என்ன செய்ய போகிறது அரசு?


No comments:

Post a Comment