22.06.2017, தேனி, சுற்றுலா வளர்ச்சி கழகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து மாவட்ட ஆரம்ப கால பயற்சி மையங்களில் பயிற்சி பெறும் மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், பேச இயலாத குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், சிறப்பாசிரியர்கள் என 40 பேர் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வைகை அணை, மதுரை காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. இவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், நுழைவு கட்டணம், சிற்றுண்டி ஆகியவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செலவிட்டது.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா செல்வதால் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்து சகஜமாக பழகும் திறன் வளரும், தன்னம்பிக்கை ஏற்படும் என சிறப்பு ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் அவர்களை கலெக்டர் வெங்கடாசலம் வழியனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள்துறை நல அலுவலர் ஜெயசீலி , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment