FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Thursday, June 1, 2017

மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் மாற்றம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் பழனிசாமி!

30.05.2017
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாற்றுத்திறனாளிகளை அரசுப் பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 1981ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. அவற்றில், பார்வைக் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு, தலா ஒரு சதவிகித பணியிடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு பயன்பெற்றுவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் நான்கு சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டை, 4 சதவிகிதமாக தமிழக அரசுப் பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன். அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசுப் பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 சதவிகித ஒதுக்கீட்டில், பார்வைக் குறைபாடுடையோர்க்கு ஒரு சதவிகிதம். செவித்திறன் குறைபாடுடையோருக்கு ஒரு சதவிகிதம்.

கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) ஒரு சதவிகிதம்.

புற உலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் (செவித்திறன் குறைபாடு
மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) ஒரு சதவிகிதம்.

இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவிகித இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதியுதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment