FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, June 10, 2017

‘இதுதான் ஒரே நாடு; ஒரே வரி கொள்கையா?’ - ஜி.எஸ்.டியால் மிரளும் மாற்றுத் திறனாளிகள்

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 5%, 12%, 18%, 28% என்ற நான்கு பிரிவுகளின் கீழ் வரிகள் விதிக்கப்பட உள்ளன. வரி விலக்கு உள்ள பொருள்களும் சில இருக்கின்றன. ஜி.எஸ்.டி. வரியால் ஸ்மார்ட் போன்கள், மருந்து உபகரணங்கள், சிமென்ட் ஆகியவற்றின் விலை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி வரியால் இதுவரை வரிவிலக்கில் இடம் பெற்றிருந்த மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் மாற்றுத் திறனாளிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்திருந்தவரை, மத்திய அரசின், ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற அடைமொழியுடன் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டியை கடுமையாக எதிர்த்தார். அவருடைய இறப்புக்குப் பின்பு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைந்த தமிழக அரசும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அரசும் மத்திய அரசின் நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இந்த வரி விதிப்பில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தகவல்களையும் வரி விதிப்பு முறைகளையும் தமிழக அரசு ஆராய்ந்து சம்மதம் தெரிவித்ததா என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது. காரணம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 18-ம் தேதி நடைபெற்ற 14-வது ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பில், வரி வதிப்பு விகிதங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமாக, 'பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்ல் (Braille) கடிகாரங்கள், ப்ரெய்ல் பேப்பர் மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ப்ரெய்ல் டைப் ரைட்டர்களுக்கு 18 சதவிகித வரியும் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வீல் சேர்களுக்கும் அவர்களைக் கொண்டு செல்ல உதவும் மற்ற உபகரணங்களுக்கும் 5 சதவிகித வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படும் கார்களுக்கு 18 சதவிகிதம் வரையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாற்றுத் திறனாளிகள் பிரயோகிக்கும் பிற உபகரணங்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பு இருக்கும்' என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி முறையைக் கண்டித்து, 15-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் ‘தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்’ (TARATDAC) போராட்டத்தை நடத்த உள்ளது. இதுகுறித்து, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்நாதனிடம் கேட்ட போது, "மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து பொருள்கள் மற்றும் உபகரணங்களுக்கும் பல்வேறு வகைகளில் வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், முதன்முறையாக 18 சதவிகிதம் வரை வரி விதிப்பு முறையை அமலுக்குக் கொண்டு வர இருக்கிறது மத்திய அரசு. தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் இந்த வரி விதிப்பானது மாற்றுத் திறனாளிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. யாருடைய முதுகுத் தண்டை உடைப்பதற்கு இந்த வரி விதிப்பு? மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.நா சபை உரிமை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதன்படி பார்த்தால், மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், இவர்கள் என்ன செய்கிறார்கள்? மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் சலுகைகளை மேலும் மோசமாக்குகிறார்கள். நகரங்களில் கூட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான பேருந்துகளோ, நடைபாதைகளோ கிடையாது. மாற்றுத் திறனாளிகள் சுலபமாக சென்று வருவதற்கு வசதியான அரசு கட்டடங்கள் கூடக் கிடையாது. இந்த நிலைமையில்தான் மாற்றுத் திறனாளிகள் மீது இவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். தாங்கிப்பிடிக்க வேண்டிய அரசே மாற்றுத் திறனாளிகளை காலில் போட்டு மிதிப்பது எந்த வகையில் நியாயம்?" எனக் கொந்தளித்தார்.

No comments:

Post a Comment