FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, November 18, 2016

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 2-ந் தேதி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம்

18.11.2016
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்டக்கிளை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசும்போது கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பா.ஜனதா, பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை உடனே பாராளுமன்றத்தில் இயற்றுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த சட்ட நகல் என்ன நிலைமையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே 4 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட நகலின் நிலைமை என்ன என்பதை நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதை வலியுறுத்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கங்கள் சமீபத்தில் டெல்லியில் கூடி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நம்புராஜன் கூறினார்.

No comments:

Post a Comment