FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, November 27, 2016

எங்களாலும் சாதிக்க முடியும்..!' அசத்திய சென்னை காதுகேளாதோர் மாணவிகள்




மாற்றுத் திறனாளி மாணவிகளுக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அரசு உதவி பெறும் சென்னை பள்ளி மாணவிகள் பரிசுகளை அள்ளினர்.

காதுகேளாதோர் அகில இந்திய விளையாட்டு கவுன்சில் சார்பில் 4வது தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் உள்பட 15 மாநிலங்களிலிருந்து காதுகேளாத மாணவிகள் பங்கேற்றனர். 12 வயதுக்குள் கீழ், சப்-ஜூனியர், ஜூனியர் (பெண்கள்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 17 மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் ரேஷ்மா, ஷீமாராணி, திருவேணி, ஜோதிகுமாரி ஆகிய மாணவிகள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். மாணவி திருவேணி 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், மாணவி ஜோதிகுமாரி, 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசையையும் பெற்றனர். இந்த மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியை சித்ரா லட்சுமி பயிற்சியாளராக இருந்தார்.

சப்-ஜூனியர் பிரிவினருக்கான குண்டு எறிதல் போட்டியில் மாணவி ரஹிட்டா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதே மாணவி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசை பெற்றார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா 2ம் இடத்தைப் பிடித்தார். நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவி நிவேதா முதல் பரிசை பெற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி ஆஷா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஆசிரியை ராகேல் ரூபா இருந்தார்.

ஜூனியர் பிரிவுக்கான போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் மணிபாரதி, பத்மா, பொன்னி, பாரதி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா மூன்றாம் இடத்தைப் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில் மாணவி தமிழ் பிரியா இரண்டாம் பரிசை பெற்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஜெஸிந்தா ரோஸ்லிண்டு இருந்தார்.

மாணவிகளை சென்னையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லிண்டு, ஆசிரியைகள் சி.ஆர்.சரஸ்வதி, கவிதா மற்றும் ஜான்ஸி ராணி, கனிமொழி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸிலிண்டு கூறுகையில், "எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சிகள் மூலம் இத்தகைய பரிசுகளை பெற முடிந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் பரிசுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு போட்டிகளைத் தவிர அனைத்திலும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment