25.11.2016
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சென்னையில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன, குறிப்பாக எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, ராமவரம் தோட்டம், சத்தியா ஸ்டுடியோ, எம்ஜிஆர் , ஜானகி காதுகேளாதோர் பள்ளி உள்ளடக்கிய பல்வேறு சொத்துகளை நிர்வகிக்க MGR உயில் எழுதி வைத்துள்ளார். மேலும் உயிலில் சத்தியா ஸ்டுடியோவை அ.தி.மு.க கட்சிக்கு எழுதிருந்தார், காதுகேளாதோர் பள்ளியை நிர்வகிக்க ஆலந்தூர், விருகம்பாக்கம் சொத்துக்களின் வருமானங்களை பயன்படுத்த வேண்டும் என உயிலில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ராமாவரம் தோட்டத்தின் ஒரு பகுதியை ஜானகியின் உறவினர்களுக்கும் மற்றொரு பகுதியை எம்ஜிஆர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சொத்துக்களை உயர்நீதிமன்றம் தான் நிர்வகிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.ஆனால்
எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியின் மகன் மற்றும் ஜானகி எம்ஜிஆரின் உறவினர்களும் சொத்துக்களுக்கு நிர்வகிக்க அதிகாரம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்ஜிஆர் இறந்த பிறகு அவரின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக உயில் எழுதியுள்ளார். அந்த உயிலில் தன் சொந்தகாரர்கள் யாரும் சொத்துக்கு உரிமை கொண்டாட உரிமை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் உயர்நீதிமன்றம் தான் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
அவரது சொத்துக்களை நிர்வகித்து வந்த ராஜேந்திரன் என்பவர் மரணம் அடைந்து விட்டதால் எம்ஜிஆர் உயிலின்படி சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனை நியமனம் செய்து உத்தரவிட்டார்
No comments:
Post a Comment