FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, November 28, 2016

நச்சுகளை சுவாசிப்பதால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு: முதன்மைச் செயலர் நசீமுதீன்

 26.11.2016
காற்றில் கலந்துள்ள நச்சுகளை கர்ப்பிணி சுவாசித்தால், கர்ப்பப் பையில் இருக்கும் சிசுவும் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.
மதுரம் நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தின் 5-ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் 13-ஆவது தேசிய பயிலரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் நசீமுதீன் பேசியது:

மருத்துவத் துறையில் நாம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் உடல்நலக் குறைபாடு, மனநலக் குறைபாடு போன்ற மாற்றுத்திறனோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு கருவில் உள்ள குழந்தை காற்றில் கலந்துள்ள நச்சுகளை சுவாசிப்பது, வாழ்க்கை முறை மாற்றம், சிறுவயதுத் திருமணங்கள், நெருங்கிய உறவில் திருமணம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் பருவ வயதில் உள்ள சிறுமிகளில் பெரும்பாலானோர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதும் பிறவிலேயே குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

உடல் ஊனம் உள்ளிட்ட பிரச்னைகளை கருவிலேயே கண்டறியப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
மேலும் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகள், அதற்கான காரணங்கள், கருவுற்ற பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எளிய விளக்கக் கையேடு தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களில் 60 சதவீதம் பேரால் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, எளிய தமிழில் இதுதொடர்பான கையேடு வெளியிடப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2010-2011-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.112 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

"விரைவில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி'
மாற்றுத்திறனாளிகளைக் கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் திட்டப்படி, சென்னை, கோவை மாநகரங்களில் மொத்தம் 25 கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், சாய்தளம் உள்ளிட்டவை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளளது. ரூ.20 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்துக்கு முதற்கட்டமாக, ரூ.3.80 கோடி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

No comments:

Post a Comment