09.11.2016, திருப்பூர்:திருப்பூரில் நடைபெற்று வரும், காது கேளாதோருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமில், இரண்டாவது நாளில், 82 பேர் பங்கேற்றனர்.தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், காதுகேளாதோருக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்கும், மூன்று நாள் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் வளாகத்தில், காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது. முகாமின் முதல் நாளில், 70 பேர் பங்கேற்றனர்.
இரண்டாவது நாளாக நேற்று நடந்த மருத்துவ முகாமில், 80 பேர் பங்கேற்றனர். அதில், காது கேட்கும் திறன் சதவீதம் குறித்து, அத்துறை நிபுணர் இளங்கோ பரிசோதனை செய்தார். சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், பொது மக்கள் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கு வருபவர், ரேஷன் கார்டு, முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment