09.11.2016, திண்டுக்கல்,
ஐ.நா.சபையில், கடந்த 2007–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உரிமைகள் சட்டம் உருவாக்க வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நம் நாட்டில் மத்திய அரசு தயாரித்த புதிய சட்டநகல், 2012–ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2014 பிப்ரவரியில் பாராளுமன்ற மேலவையில் இச்சட்ட நகல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவும் சட்டநகலின் மீதான தனது ஆலோசனைகளை கடந்த ஆண்டு மே மாதமே அளித்துவிட்டது. அதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
எனவே புதிய உரிமைகள் சட்டத்தை இனியும் காலதாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்றித்தர, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.

No comments:
Post a Comment