FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, November 20, 2016

காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நவீன கருவிகள் பொருத்தப்பட்டது திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

19.11.2016, திருச்சி,
பிறவியிலேயே காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காதில் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகளை பொருத்தி, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

முதன் முறையாக...

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மணப்பாறை, தொட்டியம் காடுவெட்டி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த, பிறவியிலேயே காதுகேட்காத 3 ஏழைக்குழந்தைகளுக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டு, அக்குழந்தைகளுக்கு காதுகேட்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி தலைமையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அறுவை சிகிச்சை குறித்து சென்னை காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அதிகமான குழந்தைகள் பிறவியிலேயே காது கேட்காமல் பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்வதே ஆகும். இதனால் அந்த தம்பதியினருக்கு காது கேட்காத குழந்தை பிறக்கின்றது. காதுகேட்காத குழந்தைகளுக்கு காது கேட்க வைப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற கருவிகள் வாங்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நேற்று பிறவியிலேயே காது கேட்காத மணப்பாறையை சேர்ந்த 3 வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி புவனேஷ்வரி மற்றும் மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம், நானும் (டாக்டர் மோகன்காமேஸ்வரன்) மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி தலைமையில், அரசு மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் குழுவினர் “காக்லியர் இம்பிலான்ட்“ கருவிகளை வெற்றிகரமாக பொருத்தினோம். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் செலவாகும். ஆனால் தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக திருச்சி கலெக்டர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 6 வயது வரை உள்ள காது கேளாத குழந்தைகள் “காக்லியர் இம்பிலான்ட்“ அறுவை சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்“, என்றார்.

அப்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி, டாக்டர் பழனியப்பன் உள்பட டாக்டர்கள், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அர்சியாபேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment