27.11.2016, திருப்பூர்: "மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ளம் வேண்டும்,' என, பேராசிரியர் கிறிஸ்டோபர் காஞ்சனா பேசினார்.திருப்பூர் மாவட்ட, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலை கல்வித்திட்டம் குறித்த ஒரு நாள் முனைப்பு பயிற்சி கருத்தரங்கம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் ÷மல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீந்திரன் தலைமை வகித்தார்;கோவை சங்கரா அறிவியல் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோபர், காஞ்சனா பேசுகையில், ""மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களை பேச, கேட்க சொல்லி பெற்றோர் வற்புறுத்துவதால், ஒரு கட்டத்தில், அவர்கள் மேல் கோபம் கொள்ளும் அளவுக்கு இவர்களின் மனநிலை மாறி விடுகிறது. மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ள வேண்டும்,'' என்றார்.பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி, டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம்; நோய் வராமல் தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment