FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, November 11, 2016

கள்ளக் காதலால் விபரீதம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

08.11.2016, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்ற தாய், கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே எல்லையூரைச் சேர்ந்தவர் நாகப்பா, கவுரம்மா தம்பதியரின் மகள் வெங்கடலட்சுமி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தாய்மாமன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது குழந்தைகள் மகள் மஞ்சு(15), மகன் (முத்தப்பா(13). இந்த இரண்டு குழுந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். குடும்ப பிரச்சனை காரணமாக வெங்கடலட்சுமி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் (34) என்பவருடன் வெங்கடலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், அவர்களை பெங்களூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க சுரேஷும், வெங்கடலட்சுமியும் முடிவு செய்தனர். 6 மாதத்துக்கு முன், இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் பெங்களூருக்கு அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்தனர். இதனிடையே வெங்கடலட்சுமியின் பெற்றோர், தங்களுடைய சொத்துக்களை மகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு என 3 பங்காக பிரித்து உயில் எழுதியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடலட்சுமி கள்ளக்காதனுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி குழுந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக, பெங்களூர் காப்பகத்தில் இருந்து குழந்தைகளை எல்லையூருக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் என்பவர் குழந்தைகளை கொன்றாத ஒப்புக்கொண்டார். மேலும் சுரேஷ், தாய் வெங்கடலட்சுமி, சுரேஷின் தம்பி கோபால் (24), கோபாலின் மனைவி சாந்தி (23) ஆகிய 4 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதன்பின் 5 பேரையும் நேற்றிரவு மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment