06.11.2016, நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் கை, கால் பாதித்த மற்றும் காது கேளாத, வாய் பேசாத, 18 வயது முதல்,45 வயதுக்கு உட்பட்ட தையல் தெரிந்த மாற்றுத்திறனாளிகள், இத்திட்டத்தில் பயன் பெறலாம். விண்ணப்பத்துடன் உரிய விவரங்களை இணைத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். அதற்கான, வருமான வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment