FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, September 28, 2020

13 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சிறுவன் - 16 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கைது

26.09.2020
விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பெற்றோர் கட்டட வேலைக்கு செல்லவே, வீட்டில் தன் தம்பி, தங்கையோடு இருந்துள்ளார் அந்த சிறுமி. தம்பியும் தங்கையும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் இவர்களின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான அந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், சிறுமி சத்தம் போடவே, மாணவியின் வாயை துணியால் பொத்தி அவரிடம் மீண்டும் அத்துமீற முயன்றுள்ளார். ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி எதிர்க்கவே, ஆத்திரமடைந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சிறுமியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், தப்பி ஓட முயன்ற சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் மாற்றுத்திறனாளியான சிறுவன், சென்னையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்ததாகவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சிறுவன், சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே சிறுவனின் தொல்லை குறித்து சிறுமி தன்பெற்றோரிடம் கூறவே, அவர்களும் சிறுவனை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், இந்த கொடூர செயலை செய்துள்ளார். தன்னுடைய காதலை சிறுமி ஏற்றுக் கொள்ளாத ஆத்திரத்தில் அவரிடம் அத்துமீற முயன்றதோடு அவரை கொடூரமாகவும் கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment