20.09.2020
சைகை மொழியை இந்தியாவின் 23வது அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி நடிகர் ரன்வீர் சிங் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்திய சைகை மொழியை 23வது சைகை மொழியாக அறிவிக்குமாறு நடிகர் ரன்வீர் சிங் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் ரன்வீர் சிங் மனு அளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய இசை நிறுவனமான இன்க்இன்க் (IncInk) மூலம் நவ்ஸார் இரானி என்பவரை வைத்து காது கேளாதாருக்கான இசை நிகழ்ச்சியையும் ரன்வீர் சிங் நடத்தினார்.
ரன்வீர் சிங்கின் இந்த முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மகிழ்ச்சியை தருகின்றன. இந்திய சைகை மொழி அழகானது. காது கேளாதோர் சமூகத்துக்கு ஆதரவு தரும் ரன்வீர் சிங்குக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காது கேளாதார் அமைப்பின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment