FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 22, 2020

அரசு செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

21.09.2020
சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, சூரமங்கலம் ரயில் நிலையச் சந்திப்பு அருகில் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியில், முன்பருவப் பள்ளி 4 வயது முதல் 10-ஆம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களைக் கொண்டு, சிறப்பு கல்வியுடன், தொழிற்பயிற்சியும், கணினி பயிற்சியும் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை மூலம் அனைத்துப் பாடங்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இலவச விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், பகல் நேர மாணவா்களுக்கு மதிய உணவு, அரசால் வழங்கப்படும் இலவசக் கல்வி உபகரணங்கள், காதொலிக் கருவிகள் கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியரின் பெற்றோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, வயது சான்று, சாதிச் சான்று, சிறப்புக் கல்வி பயின்றவராக இருந்தால் பயிற்சி சான்று, 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளியை 9499933469, 04272442067 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம், 0427-2415242 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment