![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdndKSAtrmqFOJXUSjIsqxURFcRzEKK0h211h5MwGpSiIz4Wx6JTjx4GbrMYanWhXVyN32ginWs14HUyZRHjmHjHvlptpXm_rxcIRDEJiRQMg3wOsbZGX4-Tbj6t_loTjr-MT2RPmWhJVK/w500-h335/202002230243330783_Awareness-needed-to-address-online-child-abuse-say-experts_SECVPF+%25281%2529.jpg)
டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு காது கேளாத நிலையிலிருக்கும் நாலாம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது சிறுமி தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .கடந்த வாரம் அந்த சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த 14 வயதான மூன்று சிறுவர்கள் அந்த சிறுமியிடம் வந்து பேச்சுக்கொடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான் இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .
அவர்களின் பேச்சை நம்பிய அந்த சிறுமி அவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு சென்றார் .அப்போது அந்த சிறுவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்களாம் .இப்படி அவர்கள் பலமுறை இந்த செயலில் ஈடுபட்டார்களாம் .
பிறகு அந்த சிறுமி வீட்டிற்கு வந்து தன்னுடைய தாயாரிடம் இந்த விஷயத்தை கூறியதும் ,அந்த சிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுவர்கள் மீது புகாரளித்தார் .போலீசார் அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியனர் .பிறகு அந்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தார்கள் .
No comments:
Post a Comment