26.09.2020
திருச்சி, செப். 25: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால்பொருள் விற்பனை மையம் தொடங்கிப் பயன்பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் பாா்வையற்றோா் ஆவின் நிறுவன பால் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு ஆவின் முகவா்களாகும் வாய்ப்புள்ளது.
தோ்வு செய்யப்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன் வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் மற்றும் ஆவின் பொருள் கொள்முதல் நிதியாக ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் ஆவின் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்து கடை வைத்து வியாபாரம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
ஆவின் உற்பத்தி பொருள்களை விற்க வசதியாக வாடகை இடமாகவோ அல்லது சொந்த இடமாகவோ இருக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாா்பளவு புகைப்படம்- 1 வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் காா்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சி-1 என்ற முகவரியில் நேரில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590.
No comments:
Post a Comment