FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 29, 2020

நான்காவது திருமணம் செய்துகொள்ள ஆசை… அதற்கு குறுக்காக நின்ற காது கேளாத வாய் பேச முடியாத மகன் –பெற்ற தாயின் கொடூர செயல்!

27.09.2020
பீகார் மாநிலத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா அடுத்த ஹசன்பூர் காண்டா பகுதியை சேர்ந்தவர் தர்மஷீலா தேவி. இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அருண் சவுத்ரி என்பவரோடு திரும
ணம் நடந்தது. அவர்களுக்கு சாஜன் குமார் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத வாய் பேச முடியாத குழந்தை.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த தேவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து முகேஷ் சவுத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொள்ள அவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் நினைக்கையில் அவரின் குழந்தை அவருக்கு தடையாக இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார்.
சிறுவன் காணாமல் போனது குறித்து கிராமத்தாருக்கு சந்தேகம் வர போலிஸுக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தர்மஷீலா மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment