FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, September 25, 2020

செப்டம்பர் 23: உலக சைகை தினம்..!!


சர்வதேச சைகை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போதைய மொழிகள் தோன்றுவதற்கு முன் உலகில் முதன் முதலாக தோன்றிய மொழி சைகை மொழி. பழங்கால மனிதர்கள் தனது எண்ணத்தையும், உணர்வையும் சொல்வதற்கு எந்த சைகை மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி தெரியாத ஊர்களுக்கு சென்றால் எப்போதும் சைகை மொழியில் தான் கை கொடுக்கிறது. சுமார் 7 கோடி மக்கள் காதுகேளாத தன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்கும் திறன் அற்றவர்களாகவும்,20 லட்சம் மக்கள் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் சைகை மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என சைகை மொழி பலவகையாக உள்ளது. சும்மா கையை மட்டும் ஆட்டினால் அது சைகை மொழி ஆகாது. அதற்கு இலக்கணத் தன்மை வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ராதாமோகன் இயக்கிய மொழி உள்ளிட்ட படங்கள் காது கேளாதவர் பற்றியும், சைகை மொழியை பற்றி எடுத்துரைத்தது. வாய் பேச முடியாதவர்களின் கஷ்டங்களை நவீன கால அறிவியல் நீக்கியிருக்கிறது. சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அப்ளிகேஷன்களும், கருவிகள் வந்துவிட்டன.

காது கேளாதோர் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வண்ணம் சில தமிழ் செய்தி ஊடகங்கள் சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சைதை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய சைகை மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தினத்தையொட்டி காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள் நம்பிக்கை தரும் வகையிலும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தினத்தில் அவர்களின் எண்ணங்களை காது கொடுத்து கேட்க உறுதி ஏற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment