FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 22, 2020

சைகை மொழி அவசியமா?

 

சர்வதேச சைகை மொழி தினம் - செப்., 23

மனிதன், தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி, சைகை மொழி

* சைகை மொழி என்பது, பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகளுடன் பேசப்படுவது

* உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதை போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என, பல உள்ளன

* அமெரிக்க சைகை மொழியில், ஆங்கிலத்தில் உள்ள, 26 எழுத்துக்களையும், ஒரே கையால் சைகை செய்கின்றனர். மேலும், 8,000க்கும் மேற்பட்ட பல கை சைகைகளையும் பயன்படுத்துகின்றனர்

* பிரிட்டிஷ் மற்றும் இந்திய சைகை மொழியை பயன்படுத்தும் மக்கள், இரு கைகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே, சைகை மொழிகளுக்கும் பல இலக்கணங்கள் உண்டு

* இந்திய சைகை மொழியை கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்

* உலகில் பல சைகை மொழிகளை பலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்று அழைக்கப்படுபவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, காது கேளாதோரின் தந்தை என்றழைக்கப்படும், சார்லஸ் மைக்கேல் திலேப்பின்

* காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர், பிறரின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதை கணித்தனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை, பிறர் புரிந்து கொள்வதற்கென ஒரு மொழியை முதன் முதலில் உருவாக்கியவர், சார்லஸ் மைக்கேல் திலேப்பின். அதுவே, சைகை மொழி எனப்பட்டது

* மூளை நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும், 'குளோபல் அபேசியா' போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சைகை மொழி பயன்படுகிறது

* சர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்., 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது

* தற்போது, சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல, 'டிவி'யில், காது கேளாதோருக்கென வாசிக்கப்படும் செய்திகளில் பயன்படுத்தப்படுகின்றன

* சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும். எனவே, சர்வதேச சைகை மொழிகள் தினத்தை விழிப்புணர்வுடன் கொண்டாடுவோம்.

ஆர்.திவ்யா

No comments:

Post a Comment