கோவை:கோவை அரசு மருத்துவமனையில், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, ரூ.10 லட்சம் மதிப்பில் மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டன.கோவை அரசு மருத்துவமனையில், பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ரூ.7 லட்சம் மதிப்பிலான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை 218 குழந்தைகளுக்கு, காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், செவித்திறனுக்காக பொருத்தப்பட்டுள்ள கருவி பழுதடைந்த, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 32 குழந்தைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில், மாற்று கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான் கூறியதாவது:ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மதிப்புடைய இக்கருவியை, அனைவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது.இதனால், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுக்கருவிகள் வழங்குவதற்கும், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment