17.03.2016, சென்னையில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகள் விழாவில், நடிகர் விக்ரம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மாற்றுத் திறனாளிகளுக்காக கவின்கேர் மற்றும் எபிலிட்டி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய, 14 வது விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளில் சுமார் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வுக் குழுவில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட் ராம் ஆகியோர் திரைத்துறையில் இருந்து இடம் பெற்றிருந்தனர்.
முடிவில் ராஜா(திருநெல்வேலி), ஐன்ஸ்டீன் ஜேசுதாஸ்(சென்னை), அஞ்சான்(கேரளா) மற்றும் ஆங்கூர் தாமா,அஹ்லுவாலியா(புது டெல்லி) ஆகிய ஐவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் விக்ரம், நடிகை ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு பெற்ற ஐவருக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
No comments:
Post a Comment