FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, March 7, 2016

மின்சார நிறுவனத்தில் 2175 பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார நிறுவனத்தில் 2175 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் டிப்ளமோ என்ஜினீயர்கள், கலை அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அதற்கு குறைவான கல்வித்தகுதி பெற்றவர் களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனத்தில் சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சோதகர் வேதியர் பணிக்கு 100 இடங்களும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) - 100 பணியிடங்களும், இளநிலை உதவியாளர் (கணக்கு) - 250 பணியிடங்களும், இளநிலை தணிக்கையாளர் பணிக்கு 25 இடங்களும், சுருக் கெழுத்து தட்டச்சர் பணிக்கு 25 இடங்களும், தட்டச்சர் பணிக்கு 200 இடங்களும் உள்ளன. மொத்தம் 700 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். 1-7-2015 தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி:

பி.எஸ்சி. வேதியியல் படித்தவர்கள் சோதகர் வேதியர் பணியிடங்களுக்கும், இளநிலை உதவியாளர் பணிக்கு பி.ஏ., பி.காம், பி.எஸ்சி. அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சு பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட அளவில் தட்டச்சுத் திறன் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ரூ.250-ம், கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக கையப்பம் மற்றும் புகைப்படம் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-3-2016
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 18-3-16
தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல்/மே 2016 (உத்தேசமாக)

1475 பணியிடங்கள்:

மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு 500 இடங்கள், கள உதவியாளர் (பயிற்சி) பணிக்கு 900 இடங்கள், உதவி வரைவாளர் பணிக்கு 50 இடங்கள், தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்) பணிக்கு 25 இடங்கள் என மொத்தம் 1475 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்) பணிகளுக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ மெக்கானிக்கல் படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, 16-3-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.tangedco.direct recruitment.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment