25.03.2016, தாம்பரம் : உதவித்தொகை கோரி, மாற்றுத்திறனாளி சாலையில் அமர்ந்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு தாம்பரம், ஆதி நகரை சேர்ந்தவர், நாகராஜ், 45. மாற்றுத்திறனாளியான அவர், மாற்றுத்திறனாளிகள் சங்க, மாநில துணை பொது செயலராக உள்ளார்.அவருக்கு, அரசு சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மாதத்திற்கான உதவித்தொகை கிடைக்க பெறாததால், நாகராஜ், தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் விசாரித்தார். பணம் அனுப்பப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்த போது, உதவித்தொகை வரவில்லை என்றனர்.மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்ததில், பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அவரிடம் காண்பித்தனர்.
ஆனால் நேற்று தபால் அலுவலகம் சென்ற அவரிடம், பணம் வரவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டதால், அவர் ஆத்திரமடைந்தார்.உடன் தபால் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் கேனுடன், தற்கொலை செய்து கொள்ள போவதாக சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.போலீசார் அவரை சமரசம் செய்து, பணத்தை பெற்று தந்ததை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.

No comments:
Post a Comment