சிவகாசி, 17 March 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காரைக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இப்பள்ளி மாணவர் ராக்கப்பன் முதலிடம் பெற்றார். மற்றொரு மாணவர் வேல்முருகன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவி சந்திரிகா மூன்றாமிடமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி மாரிசெல்வி இரண்டாமிடமும், நீளம் தாண்டும் போட்டியில் மாணவி தனலட்சுமி மூன்றாமிடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி முத்தீஸ்வரி இரண்டாமிடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும் ரொக்கபரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள், பாராட்டினர்.

No comments:
Post a Comment