ஈரோடு, 24 March 2016
ஈரோட்டை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் உள்இணைத்து கல்வி வழங்கும் வகையிலான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை நாகர்கோவில் அக்கம் பக்கத்து சமூக பிணைப்பு, கோவை விடியல் அறக்கட்டளை, பெங்களுரூ சி.பி.எம். சாரோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.
மாற்றுத் திறன் குழந்தைகள் அனைவரும் அவரவர் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள அரசுப் பொதுப் பள்ளிகளில் படிக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி முறைகளை அமல்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறப்புப் பள்ளிகளில் உள்ளது போலவே அரசுப் பொதுப் பள்ளிகளிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான அனைத்து கல்வி உபகரணங்களும், சாதனங்களும் கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும். பொது அறிவை வளர்ப்பதற்கும் திறமைகளை வளர்ப்பதற்கும் கவிதை, கட்டுரை, ஓவியம் பேச்சுத் திறன் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான தூய்மையான, பாதுகாப்பான அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும் போன்ற கருத்துகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை புவனா தலைமை வகித்தார். கஸ்பா பேட்டை பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளி சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment