FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, March 7, 2016

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 700 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு எண்.02/2016 தேதி: 29.02.2016

பணி: சோதகர் வேதியர்

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

தகுதி: வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்)

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,200

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு)

காலியிடங்கள்: 250

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2200

தகுதி: வணிகவியல் பிரிவில் பி.காம் முடித்திருக்க வேண்டும்.


பணி: இளநிலை தணிக்கையாளர்

காலியிடங்கள்: 900

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2200

தகுதி: பி.ஏ., பி,எஸ்சி, பி.காம் முடித்திருக்க வேண்டும்.


பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: தட்டச்சர்

காலியிடங்கள்: 200

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 02.03.2016

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2016

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.03.2016

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி பின்னர் www.tangedco.directrecuitment.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment