காரைக்குடி, 11 March 2016
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளி குழந் தைகளுக்குப் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா வியாழக்கிழமை கூறினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து கணிதம் மற்றும் அறிவியல் பிரைல் குறியீடுகள் குறித்த 2 வாரப் பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசியதாவது: சாதாரண மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை விட, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு சேவையாற்றுபவர்களாவர். இந்த ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மேலும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
விழாவில், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ராஜகுரு தொடக்க உரையாற்றினார். கல்வியியல் புல முதன்மையர் பி. சிவகுமார் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் குணசேகரன் செய்திருந்தார். முன்னதாக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறைத் தலைவர் ஜெ.சுஜாதாமாலினி வரவேற்றார். பயிற்சியாளர் ஷீலா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment