திருநெல்வேலி, 17.03.2016,
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தலா 8 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த, வாய் பேச இயலாத, காது கேளாத 38 வயதுப் பெண், கணவரை இழந்தவர். தன் தந்தையுடன் வசித்து வரும் இவர், ஆடு மேய்த்து வந்தார்.
கடந்த 18.11.2013இல் வழக்கம்போல் அப்பெண் தனது உறவுக்கார சிறுமியுடன் அங்குள்ள தோமஸ்புரம் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு வந்த டேவிஸ்புரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணமுத்து (26), முனியசாமி மகன் செல்வம் (38), சௌந்திரபாண்டியன் மகன் லட்சுமணகுமார் (25) ஆகிய மூவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். பின்னர், அப்பெண்ணை காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.
உடன் சென்ற சிறுமி, தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீஸார், அப்பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சரவணமுத்து, செல்வம், லட்சுமணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிபதி ஏ.அப்துல்காதர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார். மற்றொரு பிரிவின் கீழ், மூவருக்கும் தலா ஓராண்டு சிறையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகை ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், சிறைத் தண்டனையை மூவரும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment