இந்திய ராணுவத்திற்குத் தேவையான உணவு, உடை, மருந்து, ஆயுதங்கள், டாங்கிகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில், குரூப்–பி, குரூப்–சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
தீயணைப்பு வீரர், சமையலர், டெலிபோன் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், கிரைண்டர், டர்னர், வெல்டர், எக்சாமினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 143 பேர், தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 93 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 பணியிடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 3 பணியிடங்களும் உள்ளன.
30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பு தளர்வும் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது.
டீச்சர் (பிரைமரி) பணிக்கு 12–ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலமென்ட்ரி எஜுசேன் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10–ம் வகுப்பு தேர்ச்சியும், பணி சார்ந்த அனுபவம், சான்றிதழ் பெற்றவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 19–25 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழிலோ அல்லது www.ofb.gov.in என்ற இணையதள முகவரியிலோ பார்க்கலாம்.
No comments:
Post a Comment