24.03.2016, 'அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியை நிறுத்தக் கூடாது' என, மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, அரசு பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், 30 ஆயிரம் பேருக்கு, 2010 முதல், மாதந்தோறும் வாகனப்படி, 1,000 ரூபாய் தரப்படுகிறது. இது, வீட்டில் இருந்து, பஸ் நிறுத்தத்திற்கும், அரசு அலுவலகத்திற்கும் ஆட்டோவில் செல்ல வழங்கப்படுகிறது.இதை மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனர் மற்றும் செயலர் தவறாக புரிந்து கொண்டு, 'இலவச பஸ் பாஸ் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வாகனப்படி வழங்கக்கூடாது' என, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இத்துறை அதிகாரிகளின் செயலை, தேசிய பார்வையற்றோர் இணையம், வன்மையாக கண்டிக்கிறது;வாகனப்படியை நிறுத்தக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment