11.06.2016, விருதுநகர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலமாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வியாபாரம், சேவை தொழில், உற்பத்தி தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சம் ரூ. 5 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ. 1 லட்சம் கரை கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டம். மேலும், திட்ட மதிப்பீடு உற்பத்தி நிறுவனமாயின் ரூ.5 லட்சத்திற்கும், சேவை நிறுவனமாயின் ரூ.3 லட்சத்திற்கும், வியாபார நிறுவனமாயின் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment