11.06.2016
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுவதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக, மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிந்து வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக்கொள்ள உதவிடும் வகையில் இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
இதனை பெற்றிட மாற்றுத் திறனாளிகள் தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மனுவுடன் இணைத்து ஆட்சியரக்தில் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04142-284415 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment