FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, June 8, 2016

மாற்றுத் திறனாளிகள் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும்: தில்லி மாநாட்டில் தமிழக அரசு வலியுறுத்தல்

03.06.2016, புதுடில்லி, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தில்லி மாநாட்டில் தமிழக அரசு வலியுறுத்தியது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை பொறுப்பு வகிக்கும் மாநில சமூக நலத் துறை அமைச்சர்கள் மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வி.சரோஜா பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறன் குழந்தைகளை தமிழக முதல்வர் தாயுள்ளத்துடன் பாதுகாத்து வருகிறார். அவர்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2010-11 நிதி நிலை ஆண்டறிக்கையில் ரூ.111.86 கோடி ஒதுக்கப்பட்டது. 2015-16 நிதியாண்டில் இந்த நிதி ஒதுக்கீடு 361.96 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 

மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் நடமாடும் சிகிச்சைப் பிரிவுகளும்,
காது கேளாத, மன நலன் பாதித்தவர்களுக்கு சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மன நலம் பாதித்த, கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.237.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,33,891 பேர் பயனடைந்து வருகின்றனர்.

மாநில அரசின் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு பயணச் சலுகை அளிக்கப்படுகிறது. அனைத்துப் பிரிவு மாற்றுத் திறனாளிகளும் மாநிலத்தில் எந்த இடத்திற்கும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 70 சதவீதம் பயணச் சலுகை அளிக்கப்படுகிறது. "தாலிக்கு தங்கம்' திட்டமும் மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.

மேலும், கால்கள் பாதித்த மாற்றுத் திறனாளி மாணவர்கள், தனி நபர்களுக்கு பெட்ரோலில் இயங்கும் ரூ.14.75 கோடியில் மொத்தம் 2,691 ஸ்கூட்டர்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. 

மாநிலத்தில் 435 சிறப்புப் பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் வகையில் 42 தொழில் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.600 முதல் ரூ.1,000 வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 11.79 லட்சம் பேரில் 95 சதவீதம் பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

"அணுகத்தக்க இந்தியா பிரசாரம்' திட்டத்தின் கீழ் சென்னை, கோவையில் 49 கட்டடங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்கள் மாற்றுத் திறனாளிகள் தங்கு தடையின்றி செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான திட்டங்களுக்குரிய நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதேபோன்று, மாற்றுத் திறனாளிகள் சட்ட அமலாக்க திட்டத்திற்கும் (எஸ்ஐபிடிஏ) மத்திய அரசு நிதி ஆதரவையும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்ட முன்மொழிவுக்கு ஒப்புதலையும் அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர் சரோஜா. 

இந்த மாநாட்டில் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலர் எம்.டி. நசிமுதீன் பங்கேற்றார்.

No comments:

Post a Comment