FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை: ஐ.நா.வில் இந்தியா தகவல்

16.06.2016
இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஐ.நா. சபையில் மத்திய அமைச்சக செயலர் வினோத் அகர்வால் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் செயலரான வினோத் அகர்வால் பங்கேற்றுப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், இந்தியா முழுவதும் அவரை அடையாளம் காணும் நோக்கில், தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதி, வருமானம், பணி நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தகவல்களும் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தகவல்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான மத்தியப் பல்கலைக்கழகத்தை கேரளத்தில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 2.7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நல மசோதா, நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று வினோத் அகர்வால் பேசினார்.

No comments:

Post a Comment