அவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சம்ஜெüதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் என்று கருதப்படுகிறது. பெற்றோரிடம் இருந்து பிரிந்த கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டு, "எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.
அண்மையில் "பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாகிஸ்தான் சிறுமி ஒருவரை, அவரது தாயுடன் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் காட்சியைப் போல் கீதாவும், இந்தியாவில் உள்ள தன் பெற்றோருடன் இணைய விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
பின்னர் அலுவலக ரீதியிலான நடைமுறைகள் முடிவடைந்தவுடன் கீதா கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள காது கேளாத- வாய் பேச முடியாதவர்களுக்கான காப்பகத்தில் கீதா தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக தான் ரயில் பயணம் மேற்கொள்ளவுள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பும்போது கல்வியறிவு இல்லாத பெண்ணாக இருந்த கீதா, தற்போது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்று வருகிறார்.
No comments:
Post a Comment