FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, June 4, 2016

கட்டாய சுங்க கட்டணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

01.06.2016, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற 1976ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், அது செயல்படுத்தாத நிலை உள்ளது என்று கூறி தமிழக மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2003ல் மத்திய அரசின் சுற்றிக்கையில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை, அவர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமீபமாக மாற்றுத் திறனாளிகள் சிலர் தஞ்சாவூரில் சுங்க கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் பி.பி.சியிடம் பேசுகையில், ''இந்த விவகாரத்தில், மத்திய போக்குவரத்து துறையின் மாநில அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தாலும், அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

அவர் பி.ஜே.பி அலுவலகத்திற்கு வரும் நாளில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அமைச்சர் இடங்களில் எல்லாம் எங்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்,'' என்றார்.

இது குறித்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டபோது, ''மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசி விரைவாக முடிவு எடுக்கப்படும்,'' என பொன். ராதாகிருஷ்ணன் பி பி சி யிடம் கூறினார்


No comments:

Post a Comment